வெடி’க்க அனுமதித்த விஷால்

வியாழன், 13 மே, 2010


                   பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், வெடி. ராவணன் மாதி‌ி வருடக்கணக்கில் இழுக்காமல் நச்சென்று தீபாவளிக்கு படத்தை ‌ரிலீஸ் செய்கிறார்கள். ‌ரிலீஸ் தேதிக்கு பொருத்தமான பெயர் கிடைத்ததில் விக்ரமுக்கு டபுள் ஆனந்தம்.
                    
              ஆனால் இந்தப் பெயரை விஷாலின் குடும்ப நிறுவனமான ‌ஜி.கே.ரெட்டி பிலிம்ஸ் சேம்ப‌ரில் பதிவு செய்துள்ளது. மலைக்கோட்டைக்குப் பிறகு பூபதி பாண்டியன் விஷாலை வைத்து வெடி என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். அப்போது பதிவு செய்த டைட்டில் இது. விஷால் புராஜெக்ட் தள்ளிப் போனதால் விக்ரம் நடிக்கும் படத்துக்கு வெடி டைட்டிலை பயன்படுத்தினார் பூபதி பாண்டியன். ஆனாலும் முறைப்படி அனுமதி வாங்க வேண்டுமல்லவா? அந்தப் பொறுப்பை விக்ரம் ஏற்றுக் கொண்டார். விஷாலுக்கு போன் செய்து நிலைமையை விக்ரம் விளக்க, உடனடியாக வெடி டைட்டிலை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார் விஷால். விக்ரமை இயக்கிய பிறகு விஷால் நடிக்கும் ஒரு படத்தையும் பூபதி பாண்டியன் இயக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக