மணிரத்னம் இயக்கிய “ராவணன்” படம் ரிலீசுக்கு தயாராகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இப்படம் வருகிறது. தமிழ் பதிப்பில் விக்ரம் நாயகனாகவும், ஐஸ்வர்யாராய் நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்தியில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஜோடியாக வருகிறார்கள். விக்ரம் வில்லனாக நடிக்கிறார்.
“ராவணன்” பட பாடல் சி.டி.க்கள் இந்தி, தமிழில் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசை என்பதால் சி.டி.க்களுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. கடைகளில் அமோகமாக விற்பனையாகின.
மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான “ரோஜா” படம் 1992-ல் ரிலீசானபோது பாடல் கேசட்டுகள் விறுவிறுப்பாக விற்பனையாயின. அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் கலக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட “ராவணன்” பட பாடல் சி.டி.க்கள் மார்க்கெட்டுக்கு வந்து பெருமளவு விற்று தீர்ந்துள்ளன.
“ராவணன்” படத்தை உலகெங்கும் விளம்பரபடுத்தும் வேலைகளில் மணிரத்னம் அடுத்து இறங்குகிறார். இதற்காக விக்ரம், ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன், பிரியாமணி உள்பட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் சுற்றுப்பயணம் செல்கின்றனர். வருகிற 14-ந்தேதி சென்னையில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபற்றி விக்ரம் கூறும்போது,
“வரும் நாட்களில் “ராவணன்” பட விளம்பர வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவோம் என்றார். இந்தியாவில் மட்டுமின்றி ஜூன் 1-ந்தேதி முதல் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக