ராவணனின் 550 கோடி வசூல் டார்கெட்!

சனி, 29 மே, 2010

  • ராவணன் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. 350 கோடி ரூபாய்க்கு உலகளவில் பிஸினஸ் ஆகியுள்ளது. 550 கோடி ரூபாய் வரை இப்படம் வசூல் செய்யும் என பேசப்படுகிறது
  • அமெரிக்காவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ராவணன் படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். ராவணன் ரீலிஸ் நாளில் எல்லா தியேட்டர்களிலும் ராணவன் மட்டுமே திரையிடப்பட இருக்கிறது. 
  • ஐங்கரன் இன்டர்‌நேஷனல் நிறுவனம் லண்டனில் தன்வசம் உள்ள தியேட்டர்கள் அனைத்தையும் ராவணனுக்காக கொடுத்துள்ளதுடன், எந்த நிபந்தனைகளும் விதிக்கவில்லை என்பது ஹைலைட். 
  • இயக்குனர் மணிரத்னத்தின் சரித்திரத்திலேயே அவர் இயக்கிய படங்களில் பட ரிலீசுக்கு பின் கதை உள்ளிட்ட எந்தவித உரிமையும் அவருக்கு கிடையாது என அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறையாகும்.
  • மொத்த உரிமையும் ரிலையன்சுக்கும், சோனி நிறுவனத்திற்கும் மட்டுமேவாம். மணிரத்னரம் , ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரசூல் பூக்குட்டி என ராவணன் சம்பந்தப்பட்ட அனைவரும் உலக மார்க்கெட் உடையவர்கள் என்பதுதான் ராவணனுக்கு இத்தனை எதிர்பார்ப்பும், ஏகபோக விற்பனையும் கிடைக்க காரணமாய் இருந்திருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக