மணிரத்னம் கடந்த இரு ஆண்டுகளாக தயாரித்து இயக்கி வரும் படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது. இந்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர்.
விக்ரம் முதல்முறையாக இந்தியில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், பிருத்விராஜ் நடித்துள்ளனர். தெலுங்கில் இந்தப் படம் வில்லன் என்ற பெயரில் வெளியாகிறது. படம் வருகிற ஜூன் 18ம் தேதி உலகம் முழுக்க 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக